ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 2362
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்... 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் உள்ளிட்ட 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டாரில் இந்திய ராணுவத்தினரும், பிஎஸ்எப் வீரர்களும் காலை 4 மணியளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் ஊடுருருவல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஎஸ்எப் கான்ஸ்டபிள் ஒருவர் வீரமரணமடைந்தார். பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது காலை 10 மணிக்கு மீண்டும் சண்டை மூண்டது. இதில் ராணுவ கேப்டன் மற்றும் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர். இருதரப்புக்கும் தொடர்ந்து சண்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments