ஜனவரி 1 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் FASTags கட்டாயம் - மத்திய அரசு
ஜனவரி 1 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் பாஸ்டேக்ஸ் வைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாஸ்டேக்ஸ் எனும் பிரிபெய்ட் மின்னணு கட்டண அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 2017, டிசம்பர் 1க்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட சரக்கு, பயணிகள் 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக்ஸ் கட்டாயமாக்கப்படுகிறது என்றும், இதேபோல் பிட்னஸ் சர்டிபிகேட் சான்று புதுப்பிப்பிக்கவும் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்ட் பார்டி இன்சூரன்ஸ் பெற ஏப்ரல் 1 முதல் பாஸ்ட் டேக்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Comments