அதிபர் பதவி 'அவுட் ' மெலானியா டவுட்!- டிரம்புக்கு அடுத்த சோதனை

0 28673

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுள்ள டிரம்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த மெலானியா மாடல் அழகியாக இருந்தவர். தற்போது, 50 வயதான மெலானியா டிரம்பின் 3- வது மனைவி ஆவார். இவர்களுக்கு போரன் என்ற ஒரு மகனும் இருக்கிறான். இந்த போரனுக்கு டிரம்பின் சொத்துகளில் மற்றவர்களுக்கு கொடுப்பதை போன்ற சரி சமமான பங்கை அளிக்க வேண்டுமென்று ஏற்கெனவே டிரம்பிடத்தில் மெலானியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளார். சொத்து தொடர்பாக, இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. 

இந்த நிலையில் , அதிபர் பதவியும் போய் விட்டதால், அவரை விவாகரத்து செய்ய மெலானியா நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெள்ளைமாளிகையில், மெலானியாவின் முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் கூறுகையில், ''மெலானியா, டிரம்ப் உறவு 15 ஆண்டுகால திருமண பந்தம் முடிந்துவிட்டது, டிரம்ப் பதவியில் இருக்கும் போது, வெளியேறினால் அது அவருக்கு பெருத்த அவமானமாக போய் விடும். அதனால்தான், மெலானியா நாள்களை கடத்ததிக் கொண்டிருந்தார் . இனிமேல், டிரம்பை மெலானியா விவகாரத்து செய்து விடுவார். இதற்காகவே அவர் காத்திருக்கிறார்” என்கிறார்.

 டிரம்ப் - மெலனியா இடையே மனக்கசப்பு இருந்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளியானாலும் ,அவர்கள் இந்த தகவலை மறுத்தே வந்துள்ளனர். ஆனால், 2016 ஆம் ஆண்டு டிரம்ப் ஜனாதிபதியானதை மெலானியா நம்ப முடியாமல் தவித்ததாகவும் தன் மகன் போரன் படிப்பை காரணம் காட்டி 5 மாதங்களுக்கு பிறகே, நியூயார்க்கில் இருந்து வெள்ளைமாளிகைக்கு வந்து குடிபுகுந்தாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments