அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் மிங்க் விலங்குகளுக்கு கொரோனா..!
அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட 6 நாடுகளில் மிங்க் எனப்படும் கீரி வகை விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டென்மார்க்கில் உள்ள மிங்க் பண்ணைகளில் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து 1 கோடியே 70 லட்சம் விலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிய மரபுணு மாற்றமடைந்த, அதிக வீரியமிக்க வைரஸ் 214 பேருக்கு உறுதியானதையடுத்து சுமார் 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்வீடன் நாடுகளில் உள்ள பண்ணைகளிலும் தொற்று பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Comments