மத்திய அமெரிக்காவில் ஈட்டா புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புப் பகுதிகள்
மத்திய அமெரிக்க நாடுகளின் பல்வேறு இடங்கள் ஈட்டா புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளித்தன.
நிகரகுவாவில் கரையை கடந்த ஈட்டா புயலால் ஹோண்டுராஸ், கவுதமாலா, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் ஹோண்டுராஸின் வடகிழக்குப் பகுதிகளில் இடுப்பு அளவு வெள்ளம் சூழ்ந்ததால், வீடுகள் பல மூழ்கின.
கவுதமாலாவில் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதைந்து மாயமானவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் உதவியுடன் மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
Comments