H1B உள்ளிட்ட விசாக்கள் மீது டிரம்ப் கொண்டு வந்த தடையை, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் நீக்கும் என எதிர்பார்ப்பு

0 5393
H1B உள்ளிட்ட விசாக்கள் மீது டிரம்ப் கொண்டு வந்த தடையை, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் நீக்கும் என எதிர்பார்ப்பு

H1B  உள்ளிட்ட விசாக்கள் மீது டிரம்ப் கொண்டு வந்த தடையை, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் நீக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆயிரக்கணக்கான  இந்தியர்களுக்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கொரோனாவால் அமெரிக்கர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டு இறுதி வரை H-1B உள்ளிட்ட வேலை தொடர்பான விசாக்களை தற்காலிகமாக நிறுவத்தி வைத்து கடந்த ஜூனில் டிரம்ப் உத்தரவிட்டார்.

அக்டோபரில் அவர் பிறப்பித்த மேலும் சில உத்தரவுகளால், வேலைவாய்ப்புக்காக புதிய விசாக்களில் அமெரிக்க செல்ல முடியாத நிலை உருவானது. இதை வாபஸ் பெறுவதுடன், ஜோ பைடனின் ஆட்சியில் உயர் தொழில்நுட்பத் திறன் வாய்ந்தவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் புதிதாக விசா வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்க மாநிலங்கள் தங்களது வளர்ச்சிக்காக தேவையான அளவிற்கு வெளிநாட்டினரை தேர்வு செய்ய ஏதுவாக புதிய விசா முறைகளை உருவாக்கவும் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments