அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி நாளை முதல் ஆன்லைனில் தொடக்கம்

0 1581
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி நாளை முதல் ஆன்லைனில் தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நாளை முதல் ஆன்லைனில் தொடங்குகின்றன.

கடந்த கல்வியாண்டியில் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர 7,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,633 பேர் வெற்றி பெற்றதாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வந்ததாலும், இந்த ஆண்டு இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்துள்ள மாணவர்கள் https://neet.e-box.co.in/ என்ற இணையதளத்தில் Log In செய்து, நாளை முதல் வகுப்பில் பங்கேற்கலாம் என்றும், இந்த ஆண்டு, நீட் தேர்வுக்கு முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments