இந்தியா - சீனா இடையே ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஒப்புதல்
இந்தியா - சீனா இடையே ராணுவ அதிகாரிகள் நிலையிலான எட்டாம் சுற்றுப் பேச்சு வெள்ளியன்று நடைபெற்ற நிலையில், ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா படையினரைக் குவித்ததால் எழுந்த பதற்றத்தைத் தணிக்க ஏப்ரல் மாதம் முதல் வெவ்வேறு நாட்களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றன.
வெள்ளியன்று சுசுல் என்னுமிடத்தில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சு நடைபெற்றது.
அப்போது சிக்கலைத் தீர்க்க ராணுவம், வெளியுறவு அதிகாரிகள் நிலையில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும், எல்லையில் இருநாடுகளும் அமைதி காப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நடத்தவும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர்.
Comments