பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா பிறந்தநாள் வாழ்த்து

0 3815
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா பிறந்தநாள் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை  நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

அத்வானி இன்று  93-வது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி காலையில் டுவிட்டர் பதிவு மூலம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மோடி வெளியிட்ட பதிவில், கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி உத்வேகமாக இருக்கிறார் என்றும், அத்வானி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து  டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டுக்கு மோடி நேரில் சென்று மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் நேரில் வாழ்த்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments