இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டியது

0 981
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 45,674 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் 559 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 85 லட்சத்து 7 ஆயிரத்து 754ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 121ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு நாளில் 49 ஆயிரத்து 82 பேர் குணமாகி வீடு திரும்பியதால், குணமானோர் எண்ணிக்கை 78 லட்சத்து 68 ஆயிரத்து 968ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,967 குறைந்ததால், நாட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 665ஆக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments