அமேசான் காடுகள் அழிக்கப்படுவதால் பிரேசிலில் கார்பன் உமிழ்வு அதிகரிப்பு என விஞ்ஞானிகள் தகவல்
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதால் அங்கு கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு வானியல் ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது நடப்பாண்டு கார்பன் உமிழ்வு 9 புள்ளி 6 விழுக்காடு அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக 2025ம் ஆண்டுக்குள் கார்பன் டை ஆக்ஸைடை குறைக்க வேண்டும் என்ற பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து பிரேசில் விலகிச் செல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments