பண்டிகைக் காலங்களில் மக்கள் திரளாகக் கூடுவதால் இரண்டாவது கொரோனா அலை வீசக்கூடும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

0 1777
பண்டிகைக் காலங்களில் மக்கள் திரளாகக் கூடுவதால் இரண்டாவது கொரோனா அலை வீசக்கூடும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் மக்கள் திரளாகக் கூடுவதால் இரண்டாவது கொரோனா அலை வீசக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாகவே கருதி ஏராளமானோர் கடைவீதிகளில் திரள்கின்றனர்.

முக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்து இடங்களிலும் காற்றில் பறக்க விடப்படுகின்றன.

டெல்லி, கான்புர் போன்ற நகரங்களில் மக்கள் அலை அலையாக கடைவீதிகளில் திரண்டுள்ளனர். இதனால் கொரோனா இரண்டாவது அலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments