கங்கையில் வாழும் உயிரினங்கள் எண்ணிக்கை 49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

0 2818
கங்கையில் வாழும் உயிரினங்கள் எண்ணிக்கை 49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

கங்கை ஆற்றில் வாழும் உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்லுயிர் பெருக்கம் 49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கங்கையை தேசிய நதியாக அறிவித்த 12 வது ஆண்டு கொண்டாட்டதை முன்னிட்டு நீர்வள அமைச்சகம் ஆய்வினை நடத்தியது.

இந்திய வனவிலங்கு நிறுவனம் நடத்திய ஆய்வில், கங்கையில் மட்டுமே வாழும் நன்னீர் டால்பின்கள், நீர் நாய்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்தது.

இதனால் துணை நதிகள் அல்லாத மூலநதியில் 49 விழுக்காடு பல்லுயிர் பெருக்கம் உயர்ந்துள்ளதாக நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments