பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை அபராதம்
விவசாயக் கழிவுகளை எரித்தது தொடர்பாக பஞ்சாப் விவசாயிகளிடம் 2 கோடி ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு கடந்த 3 நாட்களில் 32 விழுக்காடு அதிகரித்துள்ளதாக வாரியம் கூறியுள்ளது.
மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4 லட்சம் ரூபாய் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ள பஞ்சாப் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், விவசாயிகளிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Comments