2021ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் : புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

0 1527
2021ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் : புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

2021-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் பேசிய அவர்,  ஹஜ் பயணத்துக்கு ஆன்லைன் ,தபால் மற்றும் ஹஜ் கைபேசி செயலி வழியாக வரும் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சவூதி அரேபிய அரசால் விதிக்கப்படும் நடைமுறைகளுக்கு ஏற்ப ஹஜ் புனிதப் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச விமானப்பயண நெறிமுறைகளின்படி ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments