பீகார் சட்டமன்றத் தேர்தலில் 55 சதவீதம் வாக்குகள் பதிவு...நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான 3வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். தமக்கு இதுவே கடைசித் தேர்தல் என்று உணர்ச்சிகரமான முறையில் நிதிஷ் குமார் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய, லோக் ஜனசக்தி கட்சி சிராக் பாஸ்வான் தலைமையிலான தனி அணியாக தேர்தலில் போட்டியிட்டது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா கூட்டணி தேஜஸ்வி யாதவின் தலைமையில் தேர்தலை சந்தித்தது. இதனால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கை பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் வெற்றி யாருக்கு என்ற கேள்வியுடன் பீகார் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.
Comments