தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் பெற்றால் முடக்கப்படும்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

0 2513
தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் பெற்றால் முடக்கப்படும்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் கூடுதல் கட்டணம் பெற்றால், உடனடியாக முடக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் பெறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு இ-சேவை மையங்களிலும், உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களிலும் நிர்ணயித்ததைவிடக் கூடுதல் கட்டணம் பெற்றால் கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments