திண்டிவனம் : ரூ. 40 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 7 பவுன் நகையை இழந்த முதியவர்!- கதறி அழுத பரிதாபம்

0 10693

திண்டிவனத்தில் நூதன முறையில் முதியவரிடம் 7 பவுன் நகையை ஏமாற்றி வாங்கி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் திண்டிவனத்தில் உறவினர்களை பார்த்து விட்டு, நேற்றிரவு சென்னை செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார் அப்போது, அங்கிருந்த 2 பேர் அவரிடம் பேச்சுக் கொடுத்து, தங்களிடம் கல் பதித்த வைர நகை இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ. 40 லட்சம் என்றும் கூறியுள்ளனர். மேலும், விலை அதிகம் என்பதால், எங்களால் அதை விற்க முடியவில்லை என்று வருத்தப்படுவது போல நடித்து கையில் வைத்திருந்த போலி நகையை முதியவரிடத்தில் காட்டியுள்ளனர். மேலும், யாராவது கொடுப்பதை கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டால் கூட பரவாயில்லை என்கிற மன நிலையில் இருப்பதாக முதியவரிடத்தில் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய முதியவர் நடராஜனுக்கு மனதில் சபலம் ஏற்பட்டது. இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட, அந்த இரண்டு பேரும், உங்கள் கழுத்தில் அணிந்த தங்க நகையை கொடுத்தால் கூட நாங்கள் இந்த வைரக் கல்லை தந்து விடுகிறோம் என்று ஆசைக்காட்டியுள்ளனர். இதனால், நடராஜன் தன் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை அவர்களிடத்தில் கழற்றிக் கொடுத்துள்ளார்.

நகையை வாங்கிக் கொண்ட இருவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டனர். பிறகு, மோசடி பேர்வழிகள் கொடுத்த வைர நகையை சோதித்து பார்த்த நடராஜனுக்கு அது போலி நகை என்று தெரிய வந்ததையடுத்து கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீஸார் வழக்குப்பதிவு வெய்து விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் பகுதியில் இது போன்று அடிக்கடி நுதன மோசடிகள் நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments