காக்கிநாடாவில் சாலையில் குப்பைகளை கொட்டுபவர்களின் வீட்டு வாசலில் பதிலுக்கு குப்பைகளை கொட்டி நகராட்சி நிர்வாகம் அதிரடி
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சாலையில் குப்பைகளை கொட்டிச் செல்பவர்களின் வீட்டு வாசலில் பதிலுக்கு குப்பைகளை கொட்டி நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
காக்கிநாடாவில் மக்களின் வீடுகளுக்கேச் சென்று துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை சேகரித்து வரும் நிலையில், சிலர் குப்பைகளை இவர்களிடம் ஒப்படைக்காமல் பொறுப்பற்ற முறையில் சாலையிலோ அல்லது சாக்கடைகளிலோ வீசிச்சென்றுள்ளனர். இதற்கு நகராட்சி ஆணையர் ஸ்வப்னில் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
Comments