அதிபராக விரும்புவதாக கூறிய கமலா ஹாரிஸின் பேத்தி....வைரல் வீடியோ
அமெரிக்க அதிபராக விரும்புவதாக துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸிடம் அவரது பேத்தி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கமலா ஹாரிஸின் மடியில் அமர்ந்திருந்த சிறுமி, தான் அதிபராக வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
அதற்கு, 35 வயதிற்கு பிறகு அதிபராகலாம் என்று கமலா ஹாரிஸ் விளக்கம் அளித்திருந்தார். இந்த உரையாடல் சுமார் ஒருமணி நேரம் நீடித்ததாக வீடியோவுடன் கமலா ஹாரிஸின் மருமகள் மீனா, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Comments