உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை!- மது குடிப்பதை கண்டித்ததால் கணவன் ஆத்திரம்

0 20610

‘கிருஷ்ணகிரி அருகே மனைவி அழகாக இருந்ததால், நடத்தையில் சந்தேகமமடைந்து மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த டெய்லர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த பள்ளசூளகரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். டெய்லரான இவரின் மனைவி பெயர் ருக்குமணி. இவர்களுக்கு , திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தும் தங்கராஜை குடிபழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. போச்சம்பள்ளி சிப்காட் பகுதியிலுள்ள தனியார் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் ருக்குமணி வேலை செய்து வந்தார். தன் மனைவி அழகாக இருப்பதால், மனைவியின் நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடத்தில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றிரவும் மது குடித்து விட்டு வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. குடிக்கக் கூடாது என்று ருக்குமணி கணவரை கடுமையாக கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரத்துடன் இருந்த தங்கராஜ், ருக்மணி உறங்கிக் கொண்டிருந்த போது, தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர், நேராக கல்லாவி காவல் நிலையத்துக்கு சென்று மனைவியை கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த ருக்குமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தங்கராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது பழக்கத்தால் குடும்பமே சிதைந்து போனதால், உறவினர்கள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments