அரசியல் காரணங்களுக்காக ஏழு பேர் விடுதலை செய்யப்படுவது ஏற்புடையது அல்ல - காங்கிரஸ்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான 7 பேரை விடுதலை செய்யுமாறு அரசியல் கட்சிகள் கோருவது ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், 7 பேரை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும் எனக் கூறியுள்ளார்.
கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகளாகத்தான் கருத வேணடுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால், தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்று அர்த்தம் என கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
Comments