தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் திரையரங்குகளை திறக்க முடிவு என தகவல்

0 3415
தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் திரையரங்குகளை திறக்க முடிவு என தகவல்

வரும் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன், வரும் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. இதற்கேற்ப ஒரு இருக்கைவிட்டு அமரும் வகையில் திரையரங்குகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், டிஜிட்டல் முறையில் திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில் தயாரிப்பாளர்கள் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என  முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளை திறந்து வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் ஏற்கெனவே திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய  திரைப்படங்களை  திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments