இன்று பிற்பகல் 3 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்

0 2119
இன்று பிற்பகல் 3 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று பிற்பகல் 3 மணிக்கு விண்ணில் பாய்கிறது. 

இஓஎஸ்-1 எனப்படும் புவி ஆய்வு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மைக்கு உதவும் இந்த செயற்கைக்கோள், எத்தகைய காலநிலையிலும் நில அமைப்புகளை முப்பரிமாணத்தில் துல்லியமாக படம்பிடிக்கும் திறன் பெற்றதாகும்.

இந்த செயற்கைக்கோளுடன், அமெரிக்காவை சேர்ந்த 4 செயற்கைக்கோள்கள், ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கை சேர்ந்த  4 செயற்கைக்கோள்கள், லித்துவேனியாவை சேர்ந்த ஒரு செயற்கைக்கோள் என வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 9 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட், சுற்றுவட்டப் பாதையில் செலுத்த உள்ளது.

இதற்கான கவுன்ட்டவுன் எனப்படும் இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகள், நேற்று மதியம் 1 மணி 2 நிமிடங்களுக்கு தொடங்கின. ராக்கெட்டின் இரண்டாம் கட்டத்திற்கான எரிபொருள் நிரப்பும் பணிகளும் இன்று காலை முடிவடைந்துவிட்டன.

பிற்பகல் 3 மணி 2 நிமிடங்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 10 செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 51ஆவது பயணம் ஆகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments