கோவா கடற்பகுதியில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை சேர்ந்த கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி
கோவா கடற்பகுதியில் நடைபெற உள்ள நான்கு நாடுகளின் கூட்டுப் கடற்படைப் போர்ப் பயிற்சியில் அமெரிக்காவின் நிமிட்ஸ், இந்தியாவின் விக்ரமாதித்யா விமானந்தாங்கிக் கப்பல்கள் பங்கேற்கின்றன.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கடற்படையினர் பங்கேற்கும் போர் ஒத்திகை கோவா கடற்பகுதியில் நவம்பர் 17 முதல் 20 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா சார்பில் மிக் போர் விமானங்களைக் கொண்ட விக்ரமாதித்யா விமானந்தாங்கிக் கப்பல் பங்கேற்க உள்ளது. அமெரிக்கக் கடற்படையில் எப் 18 வகைப் போர்விமானங்களைக் கொண்ட நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பல் பங்கேற்கிறது.
Comments