கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம்புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்த மதத்தினர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சட்டம் செயல்படுத்தபடாமல் உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா வந்த அமித் ஷா, கொரோனா முடிவுக்கு வந்ததும் அந்த சட்டம் அமல்படுத்தபடும் என்றும், அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
Comments