இலவச கொரோனா தடுப்பூசி போட 30 கோடி பயனாளிகளை அடையாளம் காணும் பணியை தொடங்கியது மத்திய அரசு
கொரோனா தடுப்பூசி தயராரானவுடன் முன்னுரிமை அளித்து இலவசமாகப் போடுவதற்கான 30 கோடி பயனாளிகளை அடையாளம் காணும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் ஒரு கோடி பேர், மாநகராட்சிப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 2 கோடி பேர், 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி பேர், இதர நோய்களைக் கொண்ட 50 வயதுக்கு குறைவான ஒரு கோடி பேர் என மொத்தம் 30 கோடி பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இம்மாத இறுதிக்குள் பட்டியலை இறுதி செய்ய செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், தடுப்பூசிகளை சேமித்து வைக்க 28 ஆயிரம் குளிர்பதன கிடங்குகள் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments