விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்!

0 2178
விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைகோள்களை ஏந்தியவாறு, பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, 11 மாதங்களுக்குப் பின் இஸ்ரோ பணிகள் தீவிரமடைந்துள்ளன. 10 செயற்கைகோள்களுடன் கூடிய பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-01 இந்த ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது. சின்தடிக் அபர்சர் ரேடார் மூலம் புவியை அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுத்து கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் உதவும்.

இதுதவிர, லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைகோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தலா 4 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது.

பிற்பகல் 03.02 மணிக்கு பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments