தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.1. 40 லட்சம் பறிமுதல்

0 2528
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.1. 40 லட்சம் பறிமுதல்

வேலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 40ஆயிரத்தை கைப்பற்றினர்.

வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் செந்தில்வேல் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டவர்கள் 92 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றி அவரை விசாரித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 21 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியவர்கள், சார்பதிவாளர் பாரதிதாசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி பைக்கிலிருந்த 20ஆயிரத்து 500 ரூபாய்,  உதவியாளர் ராமனிடம் இருந்த 8ஆயிரத்து 600 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments