அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு...மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை
மும்பை உயர்நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நிறைவடையாத நிலையில், இன்றும் விசாரணை தொடர்கிறது.
மகாராஷ்டிர அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக அர்னாப் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.
இதனிடையே, அர்னாப் மீதான சட்டப்பேரவை உரிமை மீறல் விவகாரத்தில் விசாரணையை நடத்திய உச்சநீதிமன்றம் மகாராஷ்ட்ரா அரசு சட்டமன்ற செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
உச்சநீதிமன்றத்தை அணுகுவது குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும் அர்னாப்புக்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது ஏன் என்று இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments