இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில், இருதரப்பிலும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தகவல்
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையில் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
லடாக் பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளது.
மே மாதத்திற்கு முந்தைய நிலைப்பாட்டை எல்லைக்கு கொண்டு வந்தால் தான் அமைதியும் பரஸ்பர நம்பிக்கையும் சாத்தியமாகும் என்றும் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்றைய பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் பதற்றம் நீடித்தாலும் கட்டுக்குள் கொண்டு வர இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளும் நேரடித் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
Comments