கர்த்தார்புர் உள்ளிட்ட குருதுவாராக்களின் நிர்வாக அதிகாரம் பறிப்பு விவகாரம் : பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்

0 1085
கர்த்தார்புர் உள்ளிட்ட குருதுவாராக்களின் நிர்வாக அதிகாரம் பறிப்பு விவகாரம் : பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்

கர்த்தார்புர் உள்ளிட்ட அனைத்து குருதுவாராக்களின் நிர்வாக அதிகாரத்தை இஸ்லாமிய அமைப்பிடம் ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து நேற்று வெளியுறவு அமைச்சகத்தில் ஆஜரான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

பாகிஸ்தானில் நிலவும் சமூகப் பொருளாதார ரீதியான பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக சீக்கியர்களின் உரிமையை பறித்துள்ளதாக கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments