10 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி49 ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைகோள்களை ஏந்தியவாறு, பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது.
இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டில் இ.ஓ.எஸ். 01 என்ற, பூமியை கண்காணிப்பதற்கான இந்திய செயற்கைகோள் அனுப்பப்பட உள்ளது.
அத்துடன், வணிக ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளைச் சேர்ந்த, 9 பன்னாட்டு செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.
Comments