சுலோவாக்கியாவில் ”சாலையில் பாயும்-விண்ணில் சீறும் பறக்கும் கார்” அறிமுகம்
ஐரோப்பிய நாடான சுலோவாக்கியாவில், புதிய பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இரு இருக்கைகள் கொண்ட இந்த கார் சாலையில் பாய்ந்து செல்லும் - விண்ணிலும் பறக்கும். அந்நாட்டின் பியஸ்டனி நகர விமான நிலையத்தில் இருந்து நைட்ரா நகருக்கு ஏர் கார் வெள்ளோட்டம் விடப்பட்டது.
BMW கார் என்ஜீன் பொருத்தப்பட்டு உள்ள இந்த காரில் மணிக்கு 181 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். அமெரிக்காவின் போர்டு கார் கம்பெனியின் நிறுவனர் ஹென்றி போர்டின் 80 ஆண்டு கனவு தற்போது, நிஜமாகி உள்ளதாக காரை வடிவமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments