அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை நெருங்குகிறார் ஜோ பைடன்..

0 9786
அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்கள் ஜோ பைடனுக்கு கிடைத்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனிடையே அங்கு 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்கள் ஜோ பைடனுக்கு கிடைத்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனிடையே அங்கு 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, 3 நாட்கள் ஆன போதிலும் முடிவு அறிவிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது.

538 பிரதிநிதிகளைக் கொண்ட எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் சபையில், பெரும்பான்மைக்கு 270 இடங்களைப் பெற வேண்டும். ஏற்கனவே 264 இடங்களை கைப்பற்றி இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு, இன்னும் 6 இடங்களே தேவைப்படுகிறது. அதே சமயம் 214 இடங்களுடன் அதிபர் டிரம்ப் பின்தங்கி இருக்கிறார்.

பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, அரிசோனா, வட கரோலினா ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாமல் நீடித்து வருகிறது. 16 இடங்களை தீர்மானிக்கும் ஜார்ஜியாவில், டிரம்பை விட ஆயிரக்கணக்கான வாக்குகள் பின்தங்கியிருந்த பைடன், தற்போது அவரை விட1096 வாக்குகள் அதிகம் பெற்று முந்தியுள்ளார்.

தபால் வாக்குகள் அதிக அளவில் பைடனுக்கு ஆதரவாக இருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்னும் வெளிநாடுகளில் பணியாற்றி வரும் அமெரிக்க வீரர்களின் வாக்குகள் உள்ளிட்டவை எண்ணப்படாமல் இருக்கின்றன. 1992 ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சி வெற்றி பெற்று வந்த ஜார்ஜியா, பைடன் வசம் ஆகும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

இதேபோல 6 இடங்களை கொண்டுள்ள நெவேடாவிலும் பைடன் சுமார் 11 ஆயிரத்து 438 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஏற்கெனவே, ஜார்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், அதிபர் டிரம்ப் தரப்பு சம்மந்தப்பட்ட மாநிலங்களில் நீதிமன்றங்களை அணுகியது. இதில், ஜார்ஜியா, மிச்சிகனில் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. பென்சில்வேனியாவிலும் நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த மறுத்துவிட்டது.

அதேசமயம், வாக்கு எண்ணிக்கையை அருகில் இருந்து கண்காணிக்க டிரம்ப் தரப்பு அனுமதியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments