அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 3023
மருத்துவப் படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் 189 கோடி ரூபாயில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவுக் கூட்டமைப்பான இன்ட்கோசர்வ் சார்பில் 6 புதிய தேயிலை வகைகளையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். 

நீலகிரியில் கண்காட்சி அரங்கினை பார்வையிட்ட முதலமைச்சர், தேயிலை சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினருடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது என்றார். மருத்துவப் படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். 

அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 287 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, 31 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

பின்னர் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்ற அவர், தொழில் அமைப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments