2013ஆம் ஆண்டு முதல் 4.39 கோடி போலி குடும்ப அட்டைகள் ஒழிப்பு
நாடு முழுவதும் 2013ஆம் ஆண்டில் இருந்து 4 கோடியே 39 லட்சம் போலிக் குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளன.
பொது வழங்கல் முறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, தொழில்நுட்ப முறையிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.
பயனாளிகளுக்கு ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டதால் போலிக் குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்பட்டன.
இவ்வாறு 2013ஆம் ஆண்டு முதல் 4 கோடியே 39 லட்சம் போலிக் குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நீக்கியுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவழங்கல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments