விஜய் பெயரில் கட்சி, செய்தியாளர்கள் சரமாரி கேள்வி..? நழுவிய எஸ்.ஏ.சந்திரசேகர்

0 14181

நடிகர் விஜய் பெயரில் புதிதாகத் தொடங்கிய கட்சிக்கு, அவரே முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த கட்சியில் சேரக்கூடாது என ரசிகர்களுக்கு தடை போட்டது பற்றி மழுப்பலாக பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், விட்டால் போதும் என செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து நழுவினார்.

அ.இ.த.வி.ம.இ கட்சி தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்து, விஜய் தடை போட்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். விஜய் அப்படியா சொன்னார் என எதுவும் தெரியாதவர் போல கேட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.

நடிகர் விஜய் வீட்டிற்கு செல்வதில்லையாமே, அவரோடு ஏழாம் பொருத்தமாக உறவு இருக்கிறதாமோ என செய்தியாளர்கள் கேட்டபோது, ஊகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார். அண்மையில் கூட ஆயுதபூஜைக்காக விஜய் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தார்.

எல்லா கேள்விகளுக்கும் மழுப்பலாகவே பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனித்தனியாக வந்து செய்தியாளர்கள் கேட்டால் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு நழுவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments