நியுசிலாந்து நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்
நியூசிலாந்து அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், 2017ல் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியிருந்த அவர், தனது தாய்மொழியான மலையாளத்தில் பேசிய வீடியோவை மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Doing India proud, the Indian origin minister in New Zealand @priyancanzlp addresses her country's parliament in Malayalam.@IndiainNZ @NZinIndia @VMBJP @MEAIndia pic.twitter.com/f3yUURW2Em
— Hardeep Singh Puri (@HardeepSPuri) November 5, 2020
Comments