தெலங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அமேசான் வெப் சர்வீசஸ்
தெலங்கானாவில் டேட்டா மையங்களை அமைக்க அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் 20 ஆயிரத்து 761 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டில் ஐதராபாத்தில் பல கிளவுட் கம்ப்யூட்டிங் டேட்டா மையங்களை அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா மையங்களை நிறுவுவதன் மூலம் இணையவழி வணிகம், பொதுத்துறை, வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் செயல்பாடுகள் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments