இந்தியாவுடனான பிரச்சனைகள் பேசி தீர்த்துக் கொள்ளப்படும்- நேபாள பிரதமர் சர்ம ஒலி நம்பிக்கை

0 2487
இந்தியாவுடனான பிரச்சனைகள் பேசி தீர்த்துக் கொள்ளப்படும்- நேபாள பிரதமர் சர்ம ஒலி நம்பிக்கை

இந்தியாவுடனான பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புவதாக நேபாள பிரதமர் கே.பி.சர்ம ஒலி தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவணே உடனான சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். காட்மாண்டுவில் நேற்று தளபதி நரவணேவுக்கு நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

இந்திய பகுதிகளை சேர்த்து நேபாளம் வெளியிட்ட தேசிய வரைபடத்தால், இரு தரப்பு உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நரவணேயின் பயணத்தை தொடர்ந்து அது சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments