பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட்டை செலுத்துவதற்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.!

0 3244
பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியுள்ளது.

பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-01 (EOS-01) மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து அந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவையால் இந்த ஆண்டு இதுவரை ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் எதையும் இஸ்ரோ செலுத்தவில்லை. நாளை பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட் மூலம் செலுத்தவுள்ள செயற்கைக்கோளே, இந்த ஆண்டில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் ஆகும். 

அதிலுள்ள சின்தடிக் அபர்சர் ரேடார் (synthetic aperture radar) மூலம் அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments