குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2921
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, தேனி மாவட்ட மலைபகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய கன  முதல் மிக கன மழையும், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல்  அடுத்த 48   மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர் மற்றும் நீலகிரி, தேனி மாவட்ட  மலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், அடுத்த   72  மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன  முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை  நகரின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  குறிப்பிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments