வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பக் கட்டணம் இல்லை - பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர்
வாட்ஸ் ஆப் வழியாகப் பயனாளர்கள் பணம் அனுப்புவதற்குக் கட்டணம் கிடையாது என பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ் ஆப் வழியாகப் பணம் அனுப்புவதற்காக இந்தியாவில் ஒருங்கிணைந்த செலுத்து தளமாக உள்ள என்பிசிஐயுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 2 கோடிப்பேர் என்பிசிஐயின் ஒருங்கிணைந்த செலுத்துத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள பேஸ்புக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியைப் படிப்படியாக விரிவுபடுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், வாட்ஸ் ஆப் வழியாகப் பணம் அனுப்பும் வசதி 140 வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Comments