கேரளாவில் அர்ச்சகர்கள் ஆகின்றனர் பட்டியல் வகுப்புகளைச் சேர்ந்த 19 பேர்

0 2730
கேரளாவில் அர்ச்சகர்கள் ஆகின்றனர் பட்டியல் வகுப்புகளைச் சேர்ந்த 19 பேர்

திருவாங்கூர் தேவசம் வாரியத்தின் ஆளுகைக்குட்பட்ட கோவில்களில் பகுதிநேர அர்ச்சகர்களாகப் பட்டியல் வகுப்புகளைச் சேர்ந்த 19 பேரை நியமிக்க உள்ளதாகக் கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆகம விதிகளைப் பயின்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தைப் போலவே கேரளத்திலும் எழுந்துள்ளது.

இதையடுத்துப் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 பேர் என மொத்தம் 19 பேரை அர்ச்சகர்களாக நியமிக்கத் திருவாங்கூர் தேவசம் வாரியம் முடிவு செய்துள்ளது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments