ஈரானில் 3780 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மூத்த மதத் தலைவர் கமேனி ஒப்புதல்

0 1281
ஈரானில் 3780 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மூத்த மதத் தலைவர் கமேனி ஒப்புதல்

ஈரானில் 3ஆயிரத்து 780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மூத்த மதத் தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஈரானின் மத தலைவராக உள்ள அயதுல்லா சையத் அலி கமேனி, அந்த நாட்டின் உச்ச தலைவராக உள்ளார். அவருக்கு உயர்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு பொது மற்றும் புரட்சிகர நீதிமன்றங்களால் தண்டித்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3ஆயிரத்து 780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவையொட்டி இந்த பொது மன்னிப்பை அவர் வழங்கி உள்ளார் என ஈரானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments