திருவனந்தபுரம் அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய யானைகள் மறுவாழ்வு மையம்
திருவனந்தபுரம் அருகே உலகிலேயே மிகப்பெரிய யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம் அருகே உள்ள கோட்டூரில் இப்போது 16 யானைகள் உள்ளன. இதை 50 யானைகளுக்கான வாழிடமாக மாற்ற வனத்துறை, நீர்வளத்துறை ஆகியவற்றால் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெய்யாற்றில் நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள் கட்டுவது, குட்டி யானைகளைப் பராமரிப்பதற்கான மையம், உயர்சிறப்பு கால்நடை மருத்துவமனை, பாகன்களுக்கான பயிற்சி மையம், இயற்கைச் சூழலில் யானைகளைக் கண்டுகளிக்கப் பார்வையாளர் மாடம், உணவகம், சுற்றுலாப் பயணிகளுக்கான குடில்கள் ஆகியவற்றைக் கட்டுவது இத்திட்டத்தில் அடங்கும்.
Comments