அர்னாப் கோஸ்வாமி மனு மீது உயர்நீதிமன்றம் இன்று முடிவு

0 1550
அர்னாப் கோஸ்வாமி மனு மீது உயர்நீதிமன்றம் இன்று முடிவு

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் மனு மீது மும்பை உயர் நீதிமன்றம் இன்று முடிவை அறிவிக்க உள்ளது.

இரண்டு பேரை தற்கொலைக்குத் தூண்டியதாக மும்பை போலீசாரால் கைதான அவரை, 18ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அலிபாக் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, போலீசாரின் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்றும் தம்மை விடுவிக்கக் கோரியும் அர்னாப் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்மீது விசாரணையைத் தொடங்கிய நீதிபதிகள், அவசர மனுவாக ஏற்க மறுத்து விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments