ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை அணி: டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்

0 1940
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை அணி: டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்

ஐபிஎல் தொடரின் முதல் பிளேஆப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி, மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில், அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்தனர்.

இறுதிகட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 37 ரன்களை குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் முதல் 3 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர். ஓரளவு தாக்குப் பிடித்த ஸ்டோய்னிஷ் 65 ரன்களை சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments