லண்டனில் நடைபெறும் பருவநிலை லட்சிய உச்சி மாநாடு...பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு!
இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பருவநிலை லட்சிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் அடுத்த மாதம் 12ந்தேதி இந்த மாநாடு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு பல்வேறு நாடுகள் பருவநிலை தொடர்பாக நீண்டகால அடிப்படையில் புதிய திட்டங்களை அறிவிக்கவும், வியூகங்களை வகுக்கவும், புதிய பருவநிலைக்கான நிதி உறுதிமொழிகளை ஏற்கவும் சிறந்த தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments